நடிகர் லோகேஷ் தற்கொலை ..!
பிரபலமடைந்த நடிகர் லோகேஷ் தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1990களில் மர்மதேசம், ஜீவா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் லோகேஷ்.
பல்வேறு குறும்படங்களையும் அவர் இயக்கி வந்தார். கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த லோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விஷம் அருந்தியதை அறிந்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக காஞ்சிபுரத்தில் தாயாருடன் வசித்து வந்த காலத்தில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





