--- --:--:-- --

குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்..!

2

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

இதற்கான பரிசை குடியரசுத் தலைவரிடமிருந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும் பெற்றுக்கொண்டனர்.

 

தமிழ்நாட்டில் அந்த பகுதிகளிலுள்ள 124.9 3 லட்சம் வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon