ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..!
திருச்சியில் பலூனில் காற்று நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் காயமடைந்தனர். திருச்சி கோட்டை வாசல் அருகே பலூன் வியாபாரி ஒருவர் கேஸ் பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்ததில் அருகில் நின்று கொண்டிருந்த ரவிக்குமார் என்பவர் உயிரிழந்தார். 13 வயதான ஜீவானந்தம் என்ற சிறுமி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீவானந்தம் பலூன் வாங்கும் போதுதான் சிலிண்டர் வெடித்து உள்ளது. இருபத்தி ஒரு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் வெடித்த பொழுது அருகில் இருந்த வாகனங்களும் நகை கடையின் கண்ணாடிகள் நொறுங்கின விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





