பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள்..!
கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 வருகிற ஆக்டோபர் 9ஆம் தேதி துவங்குகிறது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளவிருக்கும் ஏறக்குறைய உறுதியான போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜே. ரக்ஷன், பாரதி கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி அர்ச்சனா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ரவீந்தர், மஹாலக்ஷ்மி, சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





