--- --:--:-- --

திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு..!

3

சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியுடையவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அதில் திருமணமாகி கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் திருமணம் ஆகாத பெண்களும் 24 வாரம் வரையிலான கருவை கலைக்க உரிமை கொண்டவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 60 சதவீதம் கருக்கலைப்பு பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுவதற்கு உரிய பாதுகாப்பு மறுக்கப்படுவதே காரணம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்கீழ் சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் என்றும் இதில் திருமணமானவர் திருமணமாகாதவர் என்ற பாகுபாடு கிடையாது என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளனர்.

 

அவ்வாறு பாகுபாடு பார்ப்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை பிரிவு 14 க்கு எதிரானது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஒரு கருவுறுதலை ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது தொடர்பான உரிமை ஒவ்வொரு கருவுற்ற பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon