--- --:--:-- --

வினாத்தாள் வெளியானது தொடர்பாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!

2

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு அறிவியல் பாட தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியானது.

 

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரித்தார். இடையிலான போட்டியில் தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் வினாத்தாளை கசியவிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon