16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!
புதுக்கோட்டையில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று குழந்தைத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





