முன்னாள் காதலியுடன் கணவனை சேர்த்து வைத்த மனைவி..!
ஆந்திராவில் தாலி கட்டிய கணவனை முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்து மனைவியே திருமணத்தை முன்னின்று நடத்திய சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது. திருப்பதியை சேர்ந்த கல்யாண் என்பவர் டிக் டாக் மூலம் பிரபலமான நிலையில் கடப்பாரை சேர்ந்த விமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை கல்யாண் திருமணத்திற்கு முன் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விமலாவை சந்தித்து எனது இருவரையும் சேர்த்து வைக்க பேசியதாக தெரிகிறது.
இதனால் மனம் இறங்கிய விமலா இருவருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் செய்து வைத்து அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





