பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம்..!

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பார்ட்னர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி செய்வதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் NIA அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

 

அதேபோல் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சோதனையை மேற்கொண்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த நிலையில் கேரளாவில் கைதான ஸ்ரீதர் என்பவரிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

நீதிமன்றத்தில் இது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பயங்கரவாத செயல்களுக்கு ஆள்களை சேர்த்தால் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து உத்திரபிரதேசத்தில் பதற்றமான இடங்களிலும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.