உணவகத்திற்குள் அரசு பேருந்து புகுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உணவகத்திற்குள் அரசு பேருந்து புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவகத்தில் புகுந்தது.
இதில் கோவில்பட்டியை சேர்ந்த தேவராஜ் மற்றும் பாண்டி நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.






