--- --:--:-- --

செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவின் புதிய சீரியல் இதுவா?

12

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி 1432 எபிசோடுகளை கடந்து ஜுலை 2022ம் ஆண்டு முடிவடைந்துள்ள ஒரு தொடர் செம்பருத்தி. சபரிநாதன் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத இந்த தொடரை 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளார்.

 

முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்கள், பின் கார்த்தி வேடம் சில காரணங்களால் மாற்றப்பட அந்த கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வந்தார்.

 

இப்போது தொடர் முடிந்துவிட்டது அடுத்து என்ன இவர்கள் என்னென்ன புதிய சீரியல்கள் நடிக்க போகிறார்கள் என்பதை அரிய தான் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். தற்போது நடிகை ஷபானா குறித்து ஒரு தகவல் வைரலாக வலம் வருகிறது. அதாவது ஷபானா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் Jameela என்ற ஒரு புதிய தொடர் நடிக்க இருக்கிறாராம்.

 

ஒரு புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக ஷபானா தான் அவர் தான் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Right Menu Icon