--- --:--:-- --

கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!

7

சென்னையில் புழல் அருகே செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். பாபா கரையை சேர்ந்த குமார் என்பவரின் மகள் ஹரிப்ரியா செங்குன்றத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

நேற்று காலை ஹரிப்பிரியா செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிப்பிரியா யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

 

ஏரிக்கரையில் இளம் பெண் சடலம் கிடப்பதாக உள்ள தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது மாயமான ஹரிப்பிரியா என்பது தெரியவந்தது.

 

Right Menu Icon