--- --:--:-- --

உணவின் தரம் குறித்து குறை கூறிய காவலர் மனநலம் பாதிக்கப்பட்டவரா..?

6

உத்திரபிரதேசத்தில் உணவின் தரம் குறித்து குறை கூறிய காவலரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி பணியிலிருந்து நீக்க உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவலர் மனோஜ் குமார் என்பவர் காவல் துறையினருக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருப்பதாக புகார் மீது புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 

இதுகுறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து உணவின் தரம் குறித்து புகார் கொடுத்தவருக்கு கட்டாய பணி விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon