குளிர்பான பாட்டில்களை சோப்பு தண்ணீரில் கழுவிய வீடியோ வைரல்..!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குளிர்பான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குளிர்பான கடையில் பயணிகள் முதல் சிறுவர்கள் வரை விரும்பும் குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குளிர்பானங்களின் பாட்டில்களில் அழுக்கு படிந்து காணப்பட்டுள்ளது.
இதனால் குளிர்பானங்களின் பாட்டில்களில் உள்ள அழுக்கை போக்க சோப்புத் தண்ணீரில் கழுவ கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது . இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






