பாம்புடன் மரங்கொத்தி சண்டையிட்ட வீடியோ வைரல்..!
பாம்புகள் பொதுவாக எலி போன்ற சிறு உயிரினங்களின் பொந்துகளில் இருந்து உணவை எடுக்கும். சில சமயங்களில் பாம்புகளுடன் மற்ற சில பிராணிகளும் தற்காப்பிற்காக சண்டையிடுவதும் உண்டு. இந்நிலையில் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு வீடியோவில் பாம்பு ஒன்று மரத்திலுள்ள மரங்கொத்தியின் இடத்தில் நுழைந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து தன் இடத்திற்கு வந்த மரங்கொத்தி பறவை பாம்பு ஒன்று அதன் இடத்தில் படுத்திருப்பதை கண்டு கோபம் அடைந்தது. இதையடுத்து தன்னுடைய இடத்திலிருந்து பாம்பை விரட்டும் நோக்கில் அதை கொத்த தொடங்கியது.
பாம்பு மரங்கொத்தியுடன் போராட தொடங்கியது. இரண்டும் தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




