தேனியில் ராட்சத காற்றாடி சாய்ந்து விழுந்து விபத்து..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காற்றின் வேகத்தால் மின் உற்பத்தி செய்யும் ராட்சத காற்றாடி சாய்ந்து விழுந்தது. வேலுச்சாமி புரம் பகுதியில் ஏராளமான காற்றாலைகள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திடீரென அதிக வேகத்துடன் காற்று வீசியதால் 120 அடி உயரமுடைய இரண்டாக உடைந்து. கீழே விழுந்து நொறுங்கியது. நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




