--- --:--:-- --

குளிர் பானத்தில் நெளிந்த புழு..!

6

DJLRYFZMXFZ 29 ¸FFªFF IYFZ»O dOÑÔIY IYe ¶FFZ°F»F ¸FZÔ dQ£F SWZ ¸FSZ W¼E IYeOÞXZÜ

நாம் அன்றாடம் செயற்கை குளிர்பானங்களை குடித்து வருகிறோம். அதன் ஆரோக்கியத் தன்மை மற்றும் காலாவதியாகி இருக்கிறதா என்று செக் செய்யாமலேயே அருந்துகிறோம். அதிக விலை கொண்ட சிறிய குளிர்பானங்கள் வாங்கி குடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது.

 

அதுபோல ஒருவர் டியோ என்ற சிறிய குளிர்பானத்தை வாங்கிய போது அதில் புழு நெளிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக குளிர்பானத்தை கொடுப்பதோடு சரி அதன் தரம் குறித்து குளிர்பான நிறுவனம் தான் பொறுப்பு என்று சொல்லி முடித்தார்.

 

இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வண்டலூர் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் குளிர்பான மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon