--- --:--:-- --

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய தனியார் பள்ளி தாளாளர் கைது..!

8

கரூர் அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறிய சம்பவத்தில் தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நபர் மாணவிகளிடம் அத்துமீறி வந்துள்ளார்.

 

மாணவிகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தொல்லை கொடுத்து, நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து அனுப்பி வைத்தது என அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை ஏற்கனவே கைது செய்தனர். அதேநேரம் பள்ளியின் தாளாளராக யுவராஜ் என்பவரும் சிறுமியிடம் அத்து மீறியதாக கூறப்பட்ட நிலையில் போலீசார் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon