விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது..!
நடுவானில் பறந்த விமானத்தில் சென்னை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தஞ்சாவூர் பேராசிரியரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் 239 பயணிகள் பயணித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தஞ்சையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சென்னை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் கண்டித்தும் அவர் தனது செயலை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் அந்தப் பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்த நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் தரையிறங்கியதும் பேராசிரியர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
முன்னதாக இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் அந்தப் பெண் வெளியிட்டதால் பெண்ணுக்கு ஆதரவாக பல அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கினர். பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.






