--- --:--:-- --

9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்..!

5

திருவண்ணாமலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

 

அந்த மாணவிக்கு ரமேஷ் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் இது உண்மைதான் என கண்டறியப்பட்டு தற்பொழுது ரமேஷ் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon