மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 59 வயது ஆசிரியர் கைது..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 59 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாத ஆசிரியர் மருது கடந்த சில நாட்களாக மாணவ மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மாணவிகள் சிலர் மற்ற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இந்த விஷயம் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





