--- --:--:-- --

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்..!

4

த்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிக்கியுள்ள சிறுவனை ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்றது. சற்று தொய்வு ஏற்பட்டது.

 

சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon