மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!
இந்திய கடற்பகுதிக்குள் பாய்மரப்படகுடன் தத்தளித்த மியான்மர் மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 18 ஆம் தேதி மியான்மரை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் இருந்த போது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்தனர்.





