துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 31-வது கட்ட விசாரணை..!
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக 3வது கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், வட்டாட்சியர்கள், மருத்துவர்கள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முதற்கட்ட விசாரணையில் 962 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 31-வது கட்ட விசாரணையை தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தொடங்கியது.
துப்பாக்கி சூடு நிகழ்வின்போது பணியில் இருந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீரர்கள், உடல்களை பிரேத பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த வட்டாட்சியர்கள் உட்பட மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.






