--- --:--:-- --

ஜாக்குலின் ஃபெர்ணாண்டசிடம் 7 மணி நேரம் நடந்த விசாரணை..!

2

சிறையில் இருந்தபடியே பல நூறு கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக வெளிநாடுகளுக்கு பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்த சுகேஷ்குமார் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

 

ஏற்கனவே நான்கு முறை சம்மன் அனுப்பியும் இலங்கையில் படப்பிடிப்பு காரணமாக ஜாக்குலின் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இந்த நிலையில் நேற்று ஆஜராகி இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

 

அவருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் அவர் மனைவி லீனா மரியா பால் உள்ள தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜாக்குலின் வங்கிக்கணக்குகள் ஆராயப்பட்டன.

Right Menu Icon