தொலைக்காட்சி செய்தியாளர்கள் 3 பேர் கொரொனாவால் பலி..!
தமிழகத்தில் தனியார் செய்தித் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 3 பேர் கொரொனா பாதிப்பில் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் நல்லதம்பி. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளராக இருந்த நல்ல தம்பதிக்கு கடந்த 18-ஆம் தேதி கொரொனா தொற்று உறுதியானது.
சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைப்போல சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சு ஊடக புகைப்படக்கலைஞர் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நாகராஜனும் கொரொனாவால் பாதிக்கப்பட்டார். குலசேகரம் அருகே 39 வயதான நாகராஜன் தனியார் தொலைக்காட்சியின் குமரிமாவட்ட செய்தியாளராக பணியாற்றினார்.
காய்ச்சல் காரணமாக நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




