--- --:--:-- --

ஒரே பைக்கில் 3 பேர்.. மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்..!

2

ரபரப்பான பெங்களூர் சாலையில், ஒரே பைக்கில் மூன்று பேர் சென்றதோடு மட்டுமின்றி, பின்னால் இளைஞரும் – இளம்பெண்ணும் நடு ரோடு என்றும் பாராமல் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைத்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தபட்ட இளைஞரிடம் அபராதம் வசூல் செய்துள்ளனர்.

 

நாட்டிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம் என்றால் அது பெங்களூர்தான். இந்தியாவின் சிலிகான் வாலி என்ற பெருமையை பெற்ற பெங்களூர் உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் நேரத்தில் சில கிலோ மீட்டர் தொலைவு செல்வதற்கே வாகன ஓட்டிகள் படும் பாடு திண்டாட்டமாகவே இருக்கும்.

 

ஆனால், இத்தனை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் சில வாகன ஓட்டிகள் சாலைகளில் போக்குவரத்து விதிகள் என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு வாகனத்தை ஓட்டும் காட்சிகளும் நாள்தோறும் அரங்கேறுகின்றன. ரேசிங் கிரவுண்டில் செல்வது போல பைக்கை ஓட்டி செல்வது, லேப்டாப்பில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிசெல்வது என சில வாகன ஓட்டிகள் டிராபிக் ரூல்ஸ்களை மதிக்காமல் வாகனத்தை ஓட்டி சென்று தங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவது மட்டும் இன்றி பிற சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டி செல்கிறார்கள்.

 

பெங்களூர் ராகிகுடா பேருந்து நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 வாலிபர்கள் ஒரு இளம்பெண் பயணம் செய்தனர். ஒரு வாலிபர் பைக்கை ஓட்டிச் செல்ல, மற்றொரு வாலிபரும் இளம்பெண்ணும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

 

பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே, நடு ரோடு என்றும் பாராமல் பின்னால் இருந்த இளைஞரும் – இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபர் அடையாளம் காணப்பட்டு அவருக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

 

Right Menu Icon