இவிஎம் இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு..!
இவிஎம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழக காவல்துறை அதிகாரிகள் 2வது கட்ட பாதுகாப்புப் பணியிலும், காவலர்கள் 3ஆவது கட்ட பாதுகாப்பு பணியிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.






