--- --:--:-- --

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழப்பு..!

6

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்துள்ளது. இதனுடன் வந்த மேலும் இரண்டு பெண் யானைகள் இறந்துள்ளன. இது யானை கிட்டத்தட்ட 200 மீட்டர் வரை இழுத்து வரப்பட்டு உயிரிழந்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக ரயிலை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் ரயில்வே துறை அதிகாரிகளிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது எனவும், அதன் அடிப்படையில் அவர் இயக்கினாரா அதேபோல் அதிக சப்தம் ஒலிக்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பும் இருக்கிறது.

 

அதனை ஓட்டுநர் கடைபிடித்தாரா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Right Menu Icon