--- --:--:-- --

கோவில் கலசம் வாங்கித் தருவதாகக் கூறி 26 கோடி ரூபாய் மோசடி செய்த இசையமைப்பாளர்..!

6

கோவில் கலசம் வாங்கித் தருவதாகக் கூறி 26 கோடி ரூபாய் மோசடி செய்த இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனான அம்ரிஷ் கணேஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார்.

 

அவர் 2010ஆம் ஆண்டு நானே என்னுள் இல்லை என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மொட்டசிவா கெட்டசிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லின் சாப்ளின் டு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் .

 

இதனிடைய அம்ரிஷ் கணேஷ் கோவில் கலசம் வாங்கித் தருவதாகக் கூறி 26 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon