--- --:--:-- --

திரையுலகில் என் மீது வந்த முதல் குற்றச்சாட்டு, நான் ரசித்து பதில் அளித்தேன்: வைரமுத்து

6

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வைரமுத்து, பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ள நிலையில், திரையுலகில் தன்மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு மற்றும் அவதூறு என்ன என்பது குறித்து வைரமுத்து சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில், கண்ணதாசன் – வாலி ஆகிய கவிஞர்களுக்கு அடுத்து பாடல்களில் முத்திரை பதித்தவர்களில் முக்கியமானவர் கவிஞர் வைரமுத்து. கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் இவர், பாரதிராஜா இயக்கத்தில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தில் வைரமுத்து எழுதிய பொன்மாலை பொழுது பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

இந்த படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய வைரமுத்து அடுத்த 5 வருடங்கள் 1985-ம் ஆண்டுவரை அவருடன் பணியாற்றினார். இந்த கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து. ஆனால் 1985-ம் ஆண்டு இந்த கூட்டணி பிரிந்தது. அதன்பிறகு 1992ம் ஆண்டு ஏ.ஆர்,ரஹ்மான்வந்தபிறகு, வைரமுத்துவின் பாடல்கள் மீண்டும் பிரபலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேவா, உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வைரமுத்து அவ்வப்போது நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.

 

 

அந்த வரிசையில் சமீபத்தில் திரையுலகில் தன்மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு குறித்து பேசிய வைரமுத்து, வைரமுத்து அவர்கள் பாடல்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில், அவரது தமிழ் புலமையையும், கவிதை நயத்தையும் கண்டு வியந்த சிலர், “வைரமுத்து சொந்தமாகப் பாடல்கள் எழுதுவதில்லை; அவரது மனைவி தமிழ் படித்தவர், முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர். அவர் எழுதிக் கொடுக்கும் பாடல்களைத்தான் வைரமுத்து வாங்கி வந்து பாட்டுச் சந்தையில் விற்றுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள்.

 

 

இதற்குக் கோபப்படாமல், மிகவும் ரசித்து நகைச்சுவையோடும் பெருமிதத்தோடும் நான் பதில் அளித்தேன். “அப்படியா! எனக்குப் பாட்டு எழுதித் தருகிற அளவுக்கு ஒரு புகழ்பெற்ற அறிவாளியை நான் மனைவியாகப் பெற்றிருக்கிறேன் என்பதை இந்தச் சமூகம் ஒப்புக்கொள்கிறது. அதற்காக என்னை வாழ்த்துங்கள் என்று சொன்னேன் என வைரமுத்து சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon