ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை – ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அரசு அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்று வேலவன் செந்தில் குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார்.
இவ்வீரர்கள் மகத்தான சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய ஊக்கத்தொகை தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




