படங்களில் நடிப்பதை தள்ளிவைக்கும் நடிகை ஸ்ரீலீலா..!
கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இதை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி தந்த இவர், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபலமானார்.
நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்குத்தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இந்திய அளவில் ரீச் ஆனது.
அடுத்ததாக தனுஷுடன் இணைந்து ‘ஓம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.இந்த நிலையில், தற்போது படிப்பிற்காக படங்களில் நடிப்பதில் தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் படிப்பை (MBBS) முடித்திருக்கும் ஸ்ரீலீலா, இன்டர்ன்ஷிப் செல்லவிருக்கிறாராம்.
அடுத்த MD படிப்பிற்காக நீட் தேர்வுக்கும் தயாராகி வருகிறாராம். இதனாலேயே அவர் புதிய படங்களில் எதிலும் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





