--- --:--:-- --

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

4

ள் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நாளை மற்றும் 25ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

நாளை மறுநாள் வட கடலோர தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டியே பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எப்போதும் மாணவர்களுடன் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon