தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள்? 12 இடங்கள் எதிர்பார்க்கும் பிரேமலதா
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு எத்தனை இடங்கள் என்ற முக்கிய நகர்வு இன்று நடைபெறுகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று இரவு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் 10 முதல் 12 தொகுதிகள் வரை எதிர்பார்க்கப்படுவதால், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




