ரயில் சேவை குறைப்பு – விரைந்து தீர்வுகாண கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவையில் மொத்தம் 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான தினசரி புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 204-இல் இருந்து 164-ஆக குறைக்கப்பட்டு இருந்தது. இதில், மேலும் 49 சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது கடற்கரை-செங்கல்பட்டு இடையே 115 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால், பள்ளி, கல்லூரிகள், பணிக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாம்பரத்தில் இருந்து எழும்பூர் செல்வதற்கு சுமார் 3 மணிநேரம் ஆவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோன்று, பெருங்களத்தூர், தாம்பரம், சானடோரியம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும், தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




