--- --:--:-- --

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு..!

4

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கும் என்றும் மனுதாக்கல் செய்வதற்கு கடைசி மார்ச் 5 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு உட்பட காலியாக உள்ள 10 மாநிலங்களைவை எம்.பி தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவில் இருந்து திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோவன், கனிமொழி சோமு, செல்வராஜ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுக பொறுத்தவரை தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் ஏப்ரல் 02 ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது.

 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீட்டின் போது சட்டமன்ற தொகுதிகள் உடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் சேர்த்து கேட்டு வருகின்றனர். இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டு வருகிறது. இதனால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விரைவில் இதற்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்ககப்படுகிறது.

 

இதனிடையே மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதற்கு முன் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டுள்ளது. ஒருவேளை கூட்டணிக்கு தேமுதிக வந்தால் தொகுதி பங்கீடு தள்ளிப்போகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon