--- --:--:-- --

பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!

9

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மதுக்கரை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின் படி, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த ரோஷன் (வயது விவரம் தெரியவில்லை) மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரோஷன் அருகிலு உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது உயிரிழந்ததாக அறிவித்தனர். உயிரிழந்த ரோஷன், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டது ? வேகமே காரணமா ? அல்லது கவனக்குறைவா ? என்பதைக் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon