பனி காரணமாக ரயில், விமான சேவை கடும் பாதிப்பு..!
டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மூடு பனி நிலவுவதால் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
டெல்லியில் பனி மூட்டத்துடன் காற்று மாசும் கலந்ததால் சாலைகளில் 50 மீட்டர் தொலைவுக்குள் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பனி மூட்டத்தால் நேற்று ஒரே நாளில் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
சுமார் 470 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோன்று பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.இந்நிலையில், டெல்லியில் நள்ளிரவு முதல் பனி மூட்டம் அதிகரித்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் வரை மூடு பனி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானங்கள் தாமதமாக இயக்கப்படலாம் என்பதால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் பயணிகள் தொடர்பில் இருக்கும்படி டெல்லி விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




