நாட்டில் காப்புரிமை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம்!
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக, தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காப்புரிமை பதிவுக்காக அளிக்கப்பட்ட 68,201 விண்ணப்பங்களில், தமிழ்நாடு 15,440 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு,
நாட்டில் காப்புரிமை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து நாட்டின் அறிவுசார் தலைநகராகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என்றும் மொத்த காப்புரிமைகளில் தமிழ்நாடு மட்டும் 23 சதவிகிதத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-24ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2024-25ஆம் நிதியாண்டில் 9,565யிலிருந்து 15,440 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த 62 சதவீதம் வளர்ச்சி, மாநிலத்தில் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேகமாக விரைவுபடுத்தப்பட்டு வருவதை பிரதிபலிக்கிறது என்றும் இந்த தெடர் வளர்ச்சியின் மூலம் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




