டிசம்பர் 1 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் டிசம்பர் 3 வரை தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை. காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டார்கள்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது; “1920ல் முதல் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதில் 1923ல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மலை உச்சியில் இருக்கும் தர்கா, நெல்லி தோப்பு மற்றும் படிக்கட்டுகள் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. மற்ற மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அந்த மேல்முறையீட்டில் 1926ஆம் ஆண்டு அந்தத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. பிறகு 1930 காலகட்டத்தில் இன்றைய உச்சநீதிமன்றம் போல் அன்றைய பிரிவிவ் கவுன்சிலுக்கு செல்லும்போது, மீண்டும் மதுரை கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
1990 காலகட்டத்தில் இந்து முன்னணி அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என போராட்டம் அறிவித்து மக்கள் மன்றத்திற்கு கொண்டுவருகிறார்கள். 28.10.2025 ராமரவிக்குமார் எனும் பக்தர், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் செயல் அலுவலரிடம் முறையிடுகிறார். 3.11.2025ல் அதனை அவர் நிராகரிக்கிறார்.
அதன்பிறகு ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறார். அந்த வழக்கில் டிசம்பர் 1ஆம் தேதி நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன், 1923ல் மதுரை கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இன்றி, தர்கா, நெல்லி தோப்பு, படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. மற்றவை குறிப்பாக தீபத்தூண் இந்துக்களுக்கு சொந்தமானது என தனது தீர்ப்பில் தெரிவிக்கிறார். காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் அனுப்பப்பட்டது” – அண்ணாமலை






