--- --:--:-- --

சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தம்: உயர்நீதிமன்றத்தில் மனு

7

மையல் கேஸ் டேங்கர் லாரிகள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எல்பிஜி என்பது அத்தியாவசியப் பொருள், அதை விநியோகம் செய்யாமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் மனுவில் தெரிவித்துள்ளது.

 

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், 1,500 லாரிகளுக்கு ஓட்டுநர், உதவியாளரை நியமிக்கக் கோரி, 3ஆம் நாளாக வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர். 5,500 சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எல்பிஜி விநியோகம் செய்யும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அரசு உத்தரவு அளிக்குமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon