தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
தீபாவளி பண்டிகையையொட்டி, நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை-செங்கல்பட்டு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமாக்கத்தில் செங்கல்பட்டு-நெல்லை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.
நெல்லை-செங்கல்பட்டு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு-நெல்லை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.
21 ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




