தொண்டர் பாதுகாப்பு படை அமைக்க விஜய் முடிவு..!
கரூர் சம்பவத்திற்கு பிறகு, த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர் படையை உருவாக்க அவர் யோசித்து வருகிறார்.
திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏற்கனவே தொண்டர் படை இருக்கிறது. இந்த தொண்டர் படையின் பணி என்பது, எங்கெல்லாம் கட்சி சார்பில் கூட்டமோ, பேரணியோ நடக்கிறதோ அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தான்.
அந்த வரிசையில், தவெகவும் தற்போது தொண்டர் படை அமைத்து, தொண்டர் படையில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




