--- --:--:-- --

த.வெ.க : என். ஆனந்த், நிர்மல் குமார் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

1

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதனை அடுத்து, என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் முன் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு மற்றும் என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தரப்பு வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இருவரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து தேடிவரும் சூழலில், தற்போது முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

அதேசமயம், என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரும் மேல் முறையிட்டிற்குச் செல்வார்களா என்பதும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் கொடுக்கும்போது தெரியவரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon