உத்தரகாசியில் மேக வெடிப்பு.. பெரும் வெள்ளம்..!
உத்தராகண்ட், உத்தரகாசி பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக மிக கன மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வாடிக்கை. இந்தப் பகுதியின் அருகே தரலி எனும் கிராமம் அமைந்துள்ளது.மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர்.
மேலும், சுற்றுலாப்பயணிகளுக்காக பல ஓட்டல்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில், கீர் கங்கா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மிக கன மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தரலி கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக பெரும் மழை வெள்ளத்தில் சேறும் கலந்து வந்ததால், மலை அடிவாரத்தில் இருக்கும் தரலி கிராமம் முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாகவும் சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




