நிர்வாகிகள் மதிப்பதில்லை என புலம்பிய நயினார் நாகேந்திரன்
கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகி, அரியணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





