--- --:--:-- --

சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை..!

1

சென்னையில் பலத்த சூறைக்காற்று இடி மின்னல் மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு மற்றும் திருச்சிக்கு இரண்டு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கோவையில் இருந்து 157 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சூறைக்காற்று மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

 

அதைப்போல் கொல்கத்தாவில் இருந்து 174 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

 

சென்னையில் வானிலை முழுமையாக சீரடைந்த பின்பு இந்த விமானங்கள் மீண்டும் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து சென்னையில் இருந்து திருச்சி மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்கள் சில மணி நேரங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon