விடுமுறை முடிந்து திரும்பிய மக்கள்..!
வார விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பியதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர் சென்றோர் வார விடுமுறை நாட்கள் முடிந்து சென்னை திரும்பியதால் திண்டிவனத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திண்டிவனம் சலவாதி பகுதி தொடங்கி தென்கலவாய் வரை பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
அதேபோல, அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல்லில் அனைத்து ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் படியில் தொங்கியவாறு பயணித்தனர். ரயில் பெட்டிகளில் போதிய இடம் இல்லாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், கூடுதல் ரயில்களை இயக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




