அமெரிக்கா செல்கிறார் விக்ரம் மிஸ்ரி..!
3 நாள்கள் பயணமாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இன்று USA செல்கிறார். கடந்த பிப்ரவரியில் PM மோடி USA சென்றதன் தொடர்ச்சியாக அவர் செல்கிறார்.
இதில், இருநாட்டு வர்த்தகம், வரி விதிப்பு, தொழில்நுட்பம் குறித்து உயர் அதிகாரிகளுடன் மிஸ்ரி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தியா – பாக்., போரை மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருவதற்கும் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




